சேர்வராயன் மலை அரசு பள்ளியில் தமிழாசிரியர் நியமிக்க வேண்டும்

சேலம், ஆக.20:  சேலம் ஏற்காடு சேர்வராயன் மலை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்1 மற்றும் பிளஸ்2 வகுப்புகளுக்கு தமிழாசிரியர் நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து, மலையாளிகள் பேரவை சார்பில், கலெக்டரிடம் அளித்துள்ள  மனுவில் கூறியிருப்பது:

சேர்வராயன் மலையில் பழங்குடியின மாணவ, மாணவிகள் படிக்கும் பள்ளியில் குடிநீர், கழிவறை வசதி செய்து கொடுக்க வேண்டும். சேர்வராயன் அரசு மேல்நிலைப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு தமிழ் ஆசிரியர் 2 ஆண்டுகளாக இல்லை. இதனால், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது. எனவே, தமிழ் ஆசிரியரை நியமிக்கவேண்டும். மலைவாழ் மக்கள் அரசு தரிசு நிலத்தில் காலம், காலமாக பூர்வீகமாக விவசாயம் செய்து வரும் நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும். மலைவாழ் மக்களுக்கு எஸ்.டி., மலையாளி சாதிச்சான்று உடனடியாக வழங்க வேண்டும்.

தலைச்சோலை கிராமத்திற்கு, ஏற்காட்டில் இருந்து அரசு பஸ்  காலை, மாலை இயக்கப்பட்டது. தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அதை மீண்டும் இயக்க வேண்டும். ஏற்காட்டில் பஸ்கள் பழுது ஏற்பட்டால், சேலம் போக வேண்டியுள்ளது. எனவே, ஏற்காடு மையப்பகுதியில், பஸ் பழுது நீக்கும் நிலையம் அமைக்க வேண்டும். ஏற்காடு முதல் குப்பனூர் செல்லும் சாலையில் உள்ள சுங்கச்சாவடி அரூர் மெயின்ரோடு அருகில் அமைந்திருப்பதால், போக்குவரத்து நெரிசலால் பொதுமக்களும், பள்ளி மாணவ, மாணவிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, ஏற்காடு வனப்பகுதிக்கு உட்பட்ட பகுதியில் சுங்கச்சாவடி அமைக்க வேண்டும். ஏற்காட்டில் மலைவாழ் மக்களுக்கு உழவர்சந்தை அமைத்து கொடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

Related Stories: