மாவட்டத்தில் 7 மாதத்தில் இந்திய முறை மருத்துவத்தில் 11.53 லட்சம் பேருக்கு சிகிச்சை

சேலம், ஆக 20:சேலம் மாவட்டத்தில் கடந்த 7 மாதத்தில் மட்டும், இந்திய முறை மருத்துவத்தில் 11 லட்சம் பேருக்கு சிகிச்ைச அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ெதரிவித்தனர். தமிழக அரசுத் துறைகளில் முக்கியமான ஒன்றாக இருப்பது மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்நலத்துறை. இந்த துறையின் கீழ் தலைசிறந்த மருத்துவமாக இந்திய முறை மருத்துவம் உள்ளது. இதில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் போன்றவைகள் அடங்குகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்திய முறை மருத்துவத்திற்கான ஆயுஷ் மருத்துவ வளாகங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சேலம் மாவட்டத்தில் கடந்த 7மாதத்தில் 11 லட்சம் பேர், சிகிச்சை பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஆயுஷ் மருத்துவ அதிகாரிகள் கூறியதாவது: ஆயுஷ் மருத்துவம் என்பது சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி மற்றும் இயற்கை மருத்துவத்தை உள்ளடக்கிய இந்திய முறை மருத்துவமாகும். இந்த மருத்துவத்தின் மூலம், நோய்கள் தடுப்பு மற்றும் கண்டறிதல், உடலுக்கு எவ்வித பாதிப்பின்றி குணப்படுத்துதல் போன்றவை முக்கியமாக உள்ளது. மேலும், கர்ப்பினி பெண்களுக்கு மகப்பேறு சஞ்சீவி பெட்டகம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் பெண்கள் சுகப்பிரசவம் அதிகளவில் நடந்து வருகிறது. இதனால் சேலம் மாவட்டத்தில் சுகப்பிரசவம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போது ஆயுஷ் மருத்துவத்தின் மூலம், தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு சிறந்த    சிகிச்சை அளிக்கப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் கடந்த 2016ம் ஆண்டு 18 லட்சத்து 40,129 பேரும், 2017ம் ஆண்டில் 19 லட்சத்து 69,837 பேரும் மற்றும் 2018ம் ஆண்டில் 18 லட்சத்து 55,499 பேரும் ஆயுஷ் மருத்துவம் மூலம் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். தற்போது கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை, 7 மாதங்களில் மட்டும் 11 லட்சத்து 53,167 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: