×

ஆர்.புதுப்பட்டியில் தொடக்கப்பள்ளி அருகே சேதமடைந்த மின்கம்பம்

நாமகிரிப்பேட்டை, ஆக.20: ஆர்.புதுப்பட்டி அருகே உள்ள முனியப்பன்புதூர் தொடக்கப்பள்ளியின் சுற்றுச்சுவர் அருகே மின்கம்பம் கான்கிரீட் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. நாமகிரிப்பேட்டை அடுத்த ஆர்.புதுப்பட்டி அருகேயுள்ள முனியப்பன்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் சுற்றுச்சுவர் அருகே, மின்கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. கம்பங்கள் கான்கிரீட் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. எந்த நேரத்திலும் உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளது. ஒருபுறம் சாலையும், மறுபுறம் பள்ளியின் மைதானமும் உள்ளது. இதனால் மாணவர்கள் ஒருவித அச்சத்துடன் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். மின்கம்பத்தை மாற்றக்கோரி, பல முறை புகார் தெரிவித்தும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED வையப்பமலையில் பக்தர்கள் கிரிவலம்