×

வாணி இன்டர்நேஷனல் பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்

பள்ளிபாளையம், ஆக.20: பள்ளிபாளையம் வாணி இன்டர்நேசனல் பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் தாளாளர் பிரகாஷ் தலைமை தாங்கி பேசினார். முதல்வர் புஷ்பலதா வரவேற்றார். தேசிய கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூரும் வகையில், தேசத்தலைவர்களை போல வேடம் தரித்து குழந்தைகள் பேசினர். தேசபக்தியை போற்றி பாடல்கள் பாடப்பட்டது. மேலும், சுதந்திர போராட்டத்தில் உயிர் நீத்த தலைவர்களின் தியாகம் குறித்து விளக்கப்பட்டது. தொடர்ந்து பள்ளி குழந்தைகள் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி உறுதிமொழியேற்றனர். விழாவையொட்டி கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.திருச்செங்கோடு: திருச்செங்கோடு எஸ்பிகே பள்ளிகள் வளாகத்தில், நேற்று முன்தினம் 73வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. பள்ளிகளின் தாளாளர் செங்கோடன் தேசிய கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.     விழாவில் முதல்வர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

பரமத்திவேலூர்: பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைவர் பழனியப்பன் தலைமையேற்று, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். செயலாளர் கந்தசாமி, பொருளாளர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர்கள், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் தேசப்பற்றை வெளிப்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதேபோல், பரமத்திவேலூர் கல்லூரி சாலையில் உள்ள மலர் மழலையர் பள்ளிகளும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் தாளாளர் சக்திவேல் தேசிய கொடியை ஏற்றி வைத்து குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார்.வேலூர் நகர அனைத்து வர்த்தகர்கள் சங்கம் சார்பில், சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் சங்கத் தலைவர் சுந்தரம் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இவ்விழாவில் சங்கச் செயலாளர் உள்ளிட்ட  நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED வாக்கு இயந்திரம் பழுது வாக்குப்பதிவு தாமதம்