×

காரிமங்கலத்தில் அடிப்படை வசதியில்லாத தாலுகா அலுவலகம்

காரிமங்கலம், ஆக.20:  காரிமங்கலம் தாலுகா அலுவலகத்தில் குடிநீர், கழிப்பிட வசதிகள் இல்லாததால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
காரிமங்கலத்தில் பல ஆண்டுகளாக பயணியர் மாளிகையில் செயல்பட்டு வந்த தாலுகா அலுவலகம், கயிறுக்காரன் கொட்டாய் அருகே புதிய கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இக்கட்டிடத்தை கடந்த ஆண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். காரிமங்கலம் நகரிலிருந்து இருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, தாலுகா அலுவலகத்திற்கு பொதுமக்கள் சென்று வர போதிய பஸ் வசதிகள் இல்லை. மேலும், தாலுகா அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு, குடிநீர் வசதிகள் ஏற்படுத்தவில்லை. தாலுகா அலுவலகத்தில் கட்டப்பட்ட கழிப்பிடம், பயன்பாடின்றி பூட்டியே உள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, அடிப்படை வசதிகள் ஏற்படுத்த ேவண்டும் என ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா