பிடிஓ அலுவலகத்தில் பரபரப்பு ஊராட்சி செயலாளரை மாற்ற எதிர்ப்பு

கலசபாக்கம், ஆக.20: கலசபாக்கம் பிடிஓ அலுவலகத்தில் நேற்று ஊராட்சி செயலாளரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பிடிஓ அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கலசபாக்கம் ஒன்றியம் சிறுவள்ளூர் ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக நாராயணன் பணிபுரிந்து வருகிறார். இந்த ஊராட்சியில் பணிபுரியும் ஊராட்சி செயலாளரை வேறு ஊருக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என ஒரு தரப்பினர் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தனர்.

அதன்பேரில் ஊராட்சி செயலாளரை வேறு ஊருக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதையறிந்த மற்றொரு தரப்பினர் 200க்கும் மேற்பட்டவர்கள் நேற்று கலசபாக்கம் பிடிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், திறமையாக பணியாற்றும் ஊராட்சி செயலாளரை வேறு ஊருக்கு மாற்றக்கூடாது என கோஷமிட்டனர். இதையடுத்து, பிடிஓ அன்பழகனை சந்தித்து மனு அளித்தனர். ஆர்ப்பாட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags :
× RELATED தவறாக பயன்படுத்துகின்றனர் ஸ்மார்ட்...