×

கும்மிடிப்பூண்டி அருகே தனியார் நிறுவன ஊழியர்கள் செல்போன் டவரில் ஏறி போராட்டம்

கும்மிடிப்பூண்டி, ஆக. 20: பணி நீக்கம் செய்தவர்களை மீண்டும் சேர்க்க வலியுறுத்தி செல்போன் டவரில் ஏறி தனியார் நிறுவன ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். கும்மிடிப்பூண்டி அடுத்த பஞ்செட்டியில் உள்ள தனியார் மின்உற்பத்தி உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் 100க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தனர். இதில் 10 தொழிலாளர்களை சமீபத்தில் நிர்வாகம்  பணி நீக்கம் செய்தது.இந்த நிலையில், பணி நீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் வேலையில் சேர்க்கக்கோரி சாலை மறியல், முற்றுகை போராட்டம் உள்ளிட்டவற்றை தொழிலாளர்கள் நடத்தினர். இதுகுறித்து தொழிலாளர் நலத்துறை ஆணையர், மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தும்இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், நிர்வாகத்தின் போக்கை கண்டித்து, நேற்று காலை 10 மணியளவில் தச்சூர் - பஞ்செட்டி பகுதிகளுக்கு இடையே உள்ள ஒரு செல்போன் டவரில் 4 தொழிலாளர்கள் ஏறி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மற்ற தொழிலாளர்கள் செல்போன் டவருக்கு அடியில் நின்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்தது கும்மிடிப்பூண்டி தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் கும்மிடிப்பூண்டி துணை கண்காணிப்பாளர் கல்பனா தத், கோட்டாட்சியர் நந்தகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து வந்தனர். ேபாராட்டம் நடத்திய தொழிலாளர்களிடம் சமரச  ேபச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆர்டிஒ நந்தகுமார், “உங்களை கம்பெனிக்கு அழைத்து சென்று நிர்வாகத்திடம் கோரிக்கை நிறைவேற்ற பேச்சுவார்த்தை நடத்துகிறேன். போராட்டத்தை கைவிடுங்கள் என ஒலிப்பெருக்கி மூலம் தொழிலாளர்களிடம் தெரிவித்தார். இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கீழே இறங்கினர்.பின்னர் தொழிலாளர்களை கம்பெனிக்கு அழைத்து சென்று ேபச்சுவார்த்தை நடைபெற்றது. 4 மணி ேநரம் நடைபெற்ற இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Tags :
× RELATED புதுப்பாளையம் ஆரணியாற்றில் ₹20...