×

இலவச கண் சிகிச்சை முகாம்

திருத்துறைப்பூண்டி, ஆக.20: திருத்துறைப்பூண்டி அருகே நீர்முளை புனித சவேரியார் மேல்நிலைப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் பெற்றது.பள்ளி வளாகத்தை சுற்றிலும் 30 மரக்கன்றுகள் நடப்பட்டது. புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர் 424 பேருக்கு கண் பரிசோதனை செய்து பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு சிகிச்சைஅளித்தனர். மேலும் 168 பேர் அறுவை சிகிச்சைக்காக பாண்டிச்சேரிஅரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதில் முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.நாகை, திருவாரூர் மாவட்டங்களில் சுதந்திர தினத்தன்றுதொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத  39 நிறுவனங்கள் மீது நடவடிக்கைதிருவாரூர், ஆக 20:நாகை, திருவாரூர் மாவட்டங்களில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 39 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து திருவாரூர் தொழிலாளர் உதவி ஆணையர் பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, சென்னை தொழிலாளர் ஆணையர் நந்தகோபால் மற்றும் திருச்சி கூடுதல் ஆணையர் பாலசுப்பிரமணியன், இணை ஆணையர் தர்மசீலன் ஆகியோர் உத்தரவுபடி கடந்த 15ம்தேதி விடுமுறை தினமான சுதந்திர தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமல் நிறுவனங்களை நடத்தி வரும் நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்காக நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 99 நிறுவனங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் 11 வணிக நிறுவனங்கள், 27 உணவு நிறுவனங்கள் மற்றும் ஒரு மோட்டார் போக்குவரத்து நிறுவனம் என மொத்தம் 39 நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு முறையாக விடுமுறை அளிக்காமலும் , இரட்டிப்பு சம்பளம் வழங்காமலும் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு இந்நிறுவனங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே இதுபோன்று வரும் நாட்களில் அரசின் விடுமுறை தினங்களில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமல் இரட்டிப்பு சம்பளம் வழங்காமல் மற்றும் மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளாமல் இயங்கும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.


Tags :
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு