×

மன்னார்குடி, வடுவூர், நன்னிலம் பகுதியில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

மன்னார்குடி, ஆக. 20: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, வடுவூர், நன்னிலம், வலங்கைமான் உள் ளிட்ட பல்வேறு ஊர்களில் சிறப்பு நிதியின் கீழ் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை சிறப்பு தூர்வாரும் பணிகளின் கண்காணிப்பு அதிகாரி அரவிந்த் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.மன்னார்குடி அருகே கண்டிதம்பேட்டை கிராமத்தில் சிறப்பு குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ. 17 லட்சம் மதிப்பில் தாராபுரி வாய்க்கால், காயத்திரி இடையான் வாய்க்கால், கொன்னையாடி வாய்க்கால் ஆகிய 3 வாய்க்கால்களில் சிறப்பு நிதியின் கீழ் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை சிறப்பு தூர்வாரும் பணிகளின் கண்காணிப்பு அதிகாரி அரவிந்த் பார்வையிட்டு வாய்க்கால்கள் அகலங்களை கணக்கீடு செய்து கரைகளை பலப்படுத்தி பணிகளை விரைவில் முடிக்குமாறு பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் இளங்கோ, உதவி பொறியாளர் மதியழகன் ஆகியோரிடம் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து வடுவூர் அருகே செருமங்கலம் கிராமத்தில் சிறப்பு குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ/ 28 லட்சம் மதிப்பில் கட்டேரி வாய்க்கால் தூர்வாரப்படும் பணிகளை பார்வையிட்டும், அடுத்து நன்னிலம் அருகே கூத்தனூர் கிராமத்தில் நண்டலாறு வாய்க்கால், நாட்டாறு வாய்க்கால், கீர்த்தி மனவாறு வாய்க் கால் ஆகிய மூன்று வாய்க்கால்களில் சிறப்பு நிதியின் கீழ் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை சிறப்பு அதிகாரி அரவிந்த் பார்வையிட்டு பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் மாரிமுத்துவிடம் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.தொடர்ந்து வலங்கைமான் அருகே கொட்டையூர் கிராமத்தில் வையகளத்தூர் வாய்க்காலில் சிறப்பு குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ. 8 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த சிறப்பு அதிகாரி அரவிந்த் அங்கிருந்த விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தினார். மேலும் குடிமராமத்து பணிகளை விரைந்து முடிக்க ஏதுவாக தேவைப்படும் இடங்களுக்கு கூடுதலான பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்துமாறு பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு சிறப்பு அதிகாரி அறிவுறுத்தினார்.

Tags :
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு