×

31ம் தேதி நடக்கிறது சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரம்

திருவாரூர், ஆக. 20: இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டு தோறும் தமிழ் மாதம் ஆவணி மாதத்தில் கொண்டாடுவது வழக்கம். அதன்படி அடுத்த மாதம் 2ம் தேதி இந்த விழா நடைபெறுகிறது. தமிழகத்தில் தற்போது வட மாநிலங்களைப் போன்று இந்த விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இதற்காக ஒரு அடி உயரம் முதல் 10 அடி, 16அடி உட்பட பல்வேறு உயரங்களில் பல்வேறு வகையான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுவது வழக்கம். இதுபோன்று தயாரிக்கப்படும் சிலைகள் விநாயகர் சதுர்த்திக்கு 3 நாட்களுக்கு முன்னதாக பக்தர்கள் மூலம் விலை கொடுத்து வாங்கப்பட்டு பின்னர் அந்த சிலையானது பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதன்படி இந்த சிலைகளை திருவாரூர் சேந்தமங்கலத்தில் தயாரிக்கும் பணியில் தற்போது தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Tags :
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு