அரசு நிதியுதவி ஆசிரியர்கள் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி,  ஆக. 20:  புதுவை அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் நிர்வாகத்தின்  தொகுப்பூதியம் பெற்று பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை பணி  நிரந்தரம் செய்ய வேண்டும், 7வது ஊதியக்குழு பரிந்துரையை நிதியுதவி  ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும், மாதந்தோறும் கடைசி தேதியில் ஊதியம் வழங்க  வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை பலகட்ட போராட்டம் நடத்தியது.  அதன்பிறகு கல்வித்துறை செயலர் முன்னிலையில் முதல்வர் தலைமையில்  பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

 அப்போது அதிகாரிகளுக்கு முதல்வர் அளித்த  உத்தரவுப்படி எந்த ேவலையும் இதுவரை நடக்கவில்லை. இதை கண்டித்து நாளை  (21ம்தேதி) மாலை 5 முதல் 7 மணி வரை கல்வித்துறை எதிரே கத்தோலிக்க கல்வி  நிறுவனங்களின் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு  செய்யப்பட்டுள்ளது. இதில் அரசு நிதியுதவி பள்ளிகள், தனியார் பள்ளிகளின்  ஆசிரியர்கள், ஊழியர்கள், அரசு ஊழியர் சம்மேளனத்தினர் திரளாக  பங்கேற்கின்றனர். இதேபோல் அரசு ஊழியர் கூட்டமைப்பும் சேஷாச்சலம் தலைமையில்  தொடர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
Advertising
Advertising

Related Stories: