சிசிடிவி கேமரா பொருத்தம்

திருக்கனூர், ஆக. 20:  குற்றச்சம்பவங்களை தடுக்கும் பொருட்டு கூனிச்சம்பட்டு மெயின்ரோட்டில் சிசிடிவி கேமரா பொருத்திய இளைஞர்களை பொதுமக்கள் பாராட்டினர். புதுவை மாநிலம் திருக்கனூர் பகுதியில் திருட்டு, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களை தடுக்க மேற்கு எஸ்பி ரங்கநாதன் தலைமையில் திருக்கனூர் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப் இன்ஸ்பெக்டர் வேலு முன்னிலையில் பொதுமக்கள் நல்லுறவு கூட்டங்கள் நடத்தப்பட்டது. இதில் திருக்கனூர் பகுதியில் போலீஸ் பற்றாக்குறை இருப்பதால் அந்தந்த கிராமத்தில் உள்ள இளைஞர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் குற்றங்களை தடுக்கும் வகையில் தங்கள் பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

Advertising
Advertising

 இதையடுத்து பொதுமக்கள், வியாபாரிகள் சார்பில் ஆங்காங்கே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் குற்றச் சம்பவங்கள் நிகழாமல் தடுக்கப்படுகிறது. மேலும் திருட்டு, கொள்ளை போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவியாக உள்ளன. இந்நிலையில் கூனிச்சம்பட்டு இளைஞர்கள் சார்பில் கூனிச்சம்பட்டு மெயின்ரோட்டில் இரண்டு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டது. சமூக பொறுப்புணர்வுடன் சிசிடிவி கேமரா அமைத்த இளைஞர்களுக்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் போலீசார் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Related Stories: