மாப்அப் கலந்தாய்வு நடத்த கூடாது

புதுச்சேரி, ஆக. 20:  புதுச்சேரி யூனியன் பிரதேச அனைத்து சென்டாக் மாணவர்கள் நலச்சங்க தலைவர் நாராயணசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்டாக் மருத்துவ கலந்தாய்வில் சாதி, குடியிருப்பு சான்றிதழ், பிராந்திய ஒதுக்கீடு ஆகியவற்றில் நடைபெற்ற தவறுகள் சுட்டிக்காட்டியுள்ளோம். அதனை சரி செய்யாமல் மாப்அப் கலந்தாய்வு நடத்தக் கூடாது. 2ம் கட்ட கலந்தாய்வு முடிவில் காலியாக உள்ள இடங்களை பொது, ஓபிசி, எம்பிசி, இபிசி, பிசிஎம், எஸ்சி, எஸ்டி அடிப்படையில் பிரித்து கலந்தாய்வு நடத்த வேண்டும். அல்லது புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் மாணவர்கள் பயன் பெறும் பொதுப்பிரிவாக அறிவித்து மாப்அப் கலந்தாய்வு நடத்த வேண்டும்.

Advertising
Advertising

 மேலும் இரட்டை குடியுரிமை பெற்று இந்திரா காந்தி மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவர்கள் பற்றிய புகார் ஆதாரத்துடன் மனுவாக அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த மாணவர்கள் மீது அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று வெளிப்படையாக அறிவித்த பிறகு  மாப்அப் கலந்தாய்வு நடத்த வேண்டும். இதுதொடர்பாக கவர்னர், முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர், தலைமை செயலாளர், சென்டாக் தலைவர்,  சென்டாக் ஒருங்கிணைப்பாளர், சென்டாக் கன்வீனர் ஆகியோருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: