சிறுவள்ளிகுப்பத்தில் நியாயவிலை கட்டிடம்

செஞ்சி, ஆக. 20: சிறுவள்ளிகுப்பம் கிராமத்தில் செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலை கட்டிடத்தின் திறப்பு விழா நடந்தது. அனந்தபுரம் செயல்அலுவலர் முத்து தலைமை தாங்கினார்.  விழாவில் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ கலந்து கொண்டு நியாயவிலை கட்டிடத்தை திறந்து வைத்துபேசினார். அப்போது செஞ்சி ஒன்றிய செயலாளர் விஜயகுமார்,  அனந்தபுரம் நகர செயலாளர் கல்யாணகுமார், மேற்கு ஒன்றிய செயலாளர் விஜயராகவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் அனந்தபுரம் நகரில் ரூ.3 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய பஸ் நிலைய கட்டிடத்தை மஸ்தான் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

Advertising
Advertising

Related Stories: