இலவச சிறப்பு மருத்துவ முகாம்

ரிஷிவந்தியம், ஆக. 20:  ரிஷிவந்தியம் அருகே அத்தியூர் கிராமத்தில் ரிஷிவந்தியம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையமும், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறை சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.ரிஷிவந்தியம் வட்டார மருத்துவ அலுவலர் சரஸ்வதி தலைமை ஏற்று ஆலோசனை வழங்கினார். வாணாபுரம் மருத்துவ அலுவலர் அருண்குமார், அத்தியூர் ஊராட்சி செயலர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் மருத்துவர்கள் திவ்யா, கீதா, கோகுல்ராஜ், ஜெயபால், ஷர்மிளா, தீபிகா, அனிதா, ராஜம், சசிரேகா, சத்யா, அஜ்மல் ஆகியோர் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.முகாமை துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் ஆறுமுகம் மேற்பார்வையிட்டார். முகாமில் கர்ப்பபை வாய் புற்றுநோய், பல் மருத்துவம், சித்த மருத்துவம், பொது மருத்துவம், இருதய நோய் மருத்துவம், ஆய்வக பரிசோதனை, ரத்த பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து தீர்க்கப்படாத நோய்களுக்கும், நீண்டநாள் நோய்களுக்கும் உரிய சிகிச்சை பெறவும், அரசு நிதி உதவி பெறவும் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: