புதிய மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம்

கள்ளக்குறிச்சி, ஆக. 20:         கள்ளக்குறிச்சி அடுத்த பெருவங்கூர் கிராம எல்லையில் ரூ.1.69 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக திறப்பு விழா நடந்தது. ஆட்சியர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். எம்எல்ஏக்கள் குமரகுரு, பிரபு, போக்குவரத்து துறை ஆணையர் சமயமூர்த்தி, போக்குவரத்து துணை ஆணையர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உளுந்தூர்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் தமிழ்செல்வி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு புதிய மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார். முன்னாள் அமைச்சர் மோகன், தமிழ்நாடு சர்க்கரை ஆணைய தலைவர் ராஜசேகர், முன்னாள் எம்பி காமராஜ், முன்னாள் எம்எல்ஏ அழகுவேலு பாபு, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பாலகுருநாதன், முருகேசன், கூட்டுறவு சங்க தலைவர்கள் அய்யப்பா, குமரவேல், கூட்டுறவு சர்க்கரை ஆலை துணை தலைவர் பாபு, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ராஜேந்திரன், மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: