இளம்பெண் தீக்குளிப்பு

உளுந்தூர்பேட்டை, ஆக. 20: உளுந்தூர்பேட்டை அருகே கிளியூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் மனைவி நந்தினி(30). இவருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று இதே கிராமத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்ற போது அங்கு வந்த இதே கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகன் ஷாருக்கான்(20) என்பவர் நந்தினிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளதாக தெரிகிறது. இவ்விவகாரம் நந்தினியின் கணவருக்கு தெரியவந்தது. இதனால் ஏற்பட்ட பிரச்னையில் நந்தினி தனது உடலில் மண்ணென்ணெய் ஊற்றிக்கொண்டு தீ வைத்துள்ளார். இதில் உடல் முழுவதும் பலத்த காயம் அடைந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து திருநாவலூர் காவல்நிலையத்தில் நந்தினி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: