×

ஞானப்பிரகாசம் குளம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை ஒத்திவைக்க வேண்டும்

சிதம்பரம், ஆக. 20:   சிதம்பரம் நகரில் உள்ள பழமை வாய்ந்த குளங்களான ஞானப்பிரகாசம் குளம், ஓமக்குளம், நாகச்சேரி குளம், ஆயி குளம் ஆகிய குளங்கள் தூர்வாருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிதம்பரம்- சீர்காழி சாலையில் உள்ள ஆயி குளம் சென்னையை சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. ஞானப்பிரகாசம், ஓமக்குளம், நாகச்சேரி ஆகிய குளங்களை சுற்றி ஆக்கிரமிப்பு செய்துள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றச்சொல்லி கடந்த மாதம் நகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதையடுத்து ஞானப்பிரகாசம் குளம் மக்கள் பங்களிப்புடன் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. குளம் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுவிட்டதால் குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை இன்று (20ம் தேதி) வருவாய்துறையினர் அகற்ற நடவடிக்கை மேற்கொண்டு அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் ஞானப்பிரகாசம் குளம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பாளர்கள் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுடன் சென்று சிதம்பரம் சப்-கலெக்டரை சந்தித்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை ஒத்தி வைக்கக்கோரி மனு அளித்தனர். ரயில் நிலையத்தில் முதியவர் சடலம்நெய்வேலி, ஆக. 20:  கடலூர் மாவட்டம் வடலூர் ரயில் நிலையத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நேற்று முன்தினம் மதியம் மயங்கி கிடந்தார். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் ரயில்வே போலீசார் விரைந்து ெசன்று பார்த்த போது அந்த நபர் இறந்து கிடந்தது தெரியவந்தது. அவரது உடலை கைப்பற்றி போலீசார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த நபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர்? உடல்நலக்குறைவால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து ரயில்வே போலீசார் மற்றும் வடலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags :
× RELATED புதுவை முழுவதும் 2வது நாளாக 150...