×

104, 102 இலவச மருத்துவ சேவைகளையும் பயன்படுத்தலாம் அரசு மருத்துவமனைகள் ஆன்லைனில் இணைப்பு டீன் பாலாஜிநாதன் தகவல்

நாகர்கோவில், ஆக.20: தமிழகம் முழுவதும்  அரசு மருத்துவமனைகள் ஆன்லைன் மூலம் இணைக்கப்பட உள்ளது. நாகர்கோவில்  ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன்  நிருபர்களிடம் கூறியதாவது: ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை  பிரிவு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இங்கு சிறுநீரக மாற்று அறுவை  சிகிச்சை பிரிவு தொடங்கப்பட உள்ளது. தற்போது சிறுநீரக மாற்று அறுவை  சிகிச்சைக்காக நோயாளி ஒருவர் காத்திருக்கிறார். அடுத்த வாரம் அவருக்கு  அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் பசுமை மற்றும் தூய்மை என்ற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நமது மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பசுமைக்கு குறைவில்லை. தூய்மையாகவும் உள்ளது. எனவே நிச்சயம் இத்திட்டத்தில் முதல் பரிசு பெறுவோம். தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப  சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை, மருத்துவ  கல்லூரி மருத்துவமனை என அனைத்தும் மருத்துவமைன இயக்குநரகத்தால் ஒருங்கிணைக்கப்பட உள்ளது.

இதன்மூலம் நோயாளிகளுக்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் விரல் ரேகை பதிவு ஆகிய ஆவணங்கள் மூலம் ஒரு எண் வழங்கப்படும்.  நோயாளியின் உடல் தகுதி, நோய் மற்றும் சிகிச்சை, டிஸ்சார்ஜ் விவரங்கள் அனைத்தும் ஆன்லைனில்  உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும். எனவே அந்த எண் அல்லது விரல் ரேகை வைத்து  தமிழகத்தில் எந்த அரசு  மருத்துவமனையிலும் அவர்கள் சிகிச்சை பெற முடியும். இன்னும் 45 நாளில் இந்த  திட்டம் அமல்படுத்தப்படும். அவசர சிகிச்சைக்காக 108 என்ற எண்ணை  அழைக்கின்றனர். இதுபோல் 104 மற்றும் 102 ஆகிய கட்டணம் இல்லாத தொலைபேசி  எண்களும் உள்ளன. 104 எண்ணில் மருத்துவம் சார்ந்த சந்தேகங்கள், பிரச்னைகள்,  புகார்களுக்கு அணுகலாம். 102 எண்ணில் குழந்தை பேறு சம்பந்தப்பட்ட  பிரச்னைகளுக்கு அணுகலாம். ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரியில்  கூடுதலாக 150 மாணவர் ேசர்க்கை அனுமதிக்கு விண்ணப்பித்துள்ளோம். இதற்காக ஆய்வு செய்ய  அடுத்த வாரம் ஆய்வுக்குழு வருகிறது. மேலும், இஎன்டி, ஆர்த்தோ, மகப்பேறு  ஆகிய பிரிவுகளில் முதுகலை படிப்பிற்கு விண்ணப்பித்துள்ளோம்.

மனநோயாளிகள் பிரிவில், மின்அதிர்வு இயந்திரம் ஒரு வாரத்தில் செயல்பட உள்ளது. இதுபோல்  சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவு, நரம்பு சிகிச்சை மற்றும் நரம்பியல் மூளை அறுவை சிகிச்சை ஆகிய பிரிவுகள் ஏற்படுத்தவும் விண்ணப்பித்துள்ளோம்.  இதற்கான அனுமதியும் விரைவில் கிடைக்கும். இந்த பிரிவுகள் வந்தாலே நமது மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி என்ற நிலையை அடைந்து விடும். இவ்வாறு  அவர் கூறினார்.அரைமணி நேரத்தில் மூதாட்டிக்கு பக்கவாதம் சரியானதுகடந்த சில நாட்களுக்கு முன் பக்க வாதத்தால் பாதிக்கப்பட்ட மூதாட்டி இங்கு  அனுமதிக்கப்பட்டார். அவருக்கு  சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன்  செய்யப்பட்டதில் மூளையில் ரத்த அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  உடனடியாக அவருக்கு சுமார் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள அட்ராபிளேஸ் என்ற ஊசி  போடப்பட்டது. ஊசி போட்ட அரை மணி நேரத்தில் செயல் இழந்த அவரது வலது கை மற்றும் வலது கால் செயல்பட தொடங்கியது. உடனடியாக அவர் நடக்க ஆரம்பித்தார். பக்கவாதம் பாதிப்பு ஏற்பட்ட உடன், 3மணி நேரத்தில், தேவையான ேசாதனைகள் ெசய்து, இந்த ஊசியை ேபாட்டால், அரை மணி நேரத்தில் குணமடையலாம். அதேநேரம் ரத்தக்குழாய் வெடித்து ரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தால் இந்த ஊசி பொருந்தாது.

பிறந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சைகுழித்துறை மருத்துவமனையில் பிறந்த ஒரு குழந்தையின் வயிறு வீங்கி இருந்தது. ஸ்கேன் செய்தபோது வயிற்றில் குடலை ஒட்டி, 10க்கு 10 செமீ என்ற அளவில் கட்டி  இருந்தது. இதனால் வாய்வழி ஆகாரம் குழந்தை எடுக்க முடியவில்லை.  500 மில்லி ரத்தம் கலந்த தண்ணீருடன் சுமார் 750 கிராம் எடைகொண்ட, அந்த கட்டி மேலும் சிலநாட்கள் இருந்தால், புற்றுநோய் கட்டியாக மாறும் அபாயம் உடையது. பிறந்து 2 நாளே ஆன பச்சிளம் குழந்தைக்கு 3 மணி நேரம் மயக்க  மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை செய்வது மிகவும் அரிதான சிகிச்சையாகும். பல்முறை மருத்துவ  நிபுணர்கள் அடங்கிய குழுவால் இந்த அபூர்வ அறுவை சிகிச்சை இங்கு  செய்யப்பட்டு குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளது. 35 ஆயிரம் பிரசவங்களில்  இதுபோன்று ஒரு குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. ஆனால் அது பிழைப்பது அரிது.  இக்குழந்தை 3 அபாய கட்டங்களை தாண்டி, தற்போது வாய்வழியாக உணவு உட்கொள்கிறது. இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறது.  இதுபோல் குழந்தை பெற்ற இரு பெண்கள் மிகவும் அபாய கட்டத்தில் இங்கு சேர்க்கப்பட்டு, பல்வேறு சிறப்பு மருத்துவ குழுவினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர். என பாலாஜிநாதன் தெரிவித்தார்.பணியாளர்கள் குழந்தைகள் காப்பகம்மருத்துவர்கள்,  ெசவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை பணியாளர்கள், தங்களது பணியை மனஅமைதியுடன் பார்க்க வசதியாக அவர்களது  குழந்ைதகைள கவனித்து ெகாள்ளும், கிரஷ் எனப்படும் குழந்ைதகள் காப்பகம் இங்கு  அமைக்கப்பட உள்ளது.


Tags :
× RELATED ‘வைப்புநிதி உங்கள் அருகில்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி