பழகுவதை நிறுத்தினார் ஆட்டோ டிரைவர் மனமுடைந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி, ஆக. 14: திருச்சி சங்கிலியாண்டபுரம் வரதராஜூ தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மனவைி பாண்டிச்செல்வி(32). ராஜா மலேசியாவில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு மகள், மகன் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பாண்டிச்செல்வி திடீரென தூக்கில் பிணமாக தொங்கினார். இவரது 11 வயது மகள் எழுந்து பார்த்தபோது தாய் தூக்கில் தொங்குவதை பார்த்து கதறி அழுதார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து வழக்குப்பதிந்த பாலக்கரை போலீசார் விசாரணை நடத்தினர்.

Advertising
Advertising

இதுபற்றி போலீசார் கூறுகையில், பாண்டிச்செல்விக்கு அப்பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஆட்டோ டிரைவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையிலும் அவருடன் பழகி வந்தார். இதுகுறித்து பெற்றோருக்கு தகவல் தெரிந்த நிலையில் பாண்டிச்செல்வி குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் ஆட்டோ டிரைவர் பாண்டிச்செல்வியுடன் பழகுவதை தவிர்த்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த பாண்டிச்செல்வி, நேற்று முன்தினம் இரவு ஆட்டோ டிரைவர் வீட்டில் அமர்ந்து தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு கூறி தர்ணா நடத்தினார். அவசர போலீசுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து இருவரையும் அழைத்து சென்று காவல் நிலையத்தில் சமரசம் பேசினர். தொடர்ந்து பாண்டிச்செல்வியின் அண்ணனை அழைத்து புத்திமதி கூறி அனுப்பி வைத்தோம். வீட்டிற்கு சென்ற பாண்டிச்செல்வி மனவேதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

Related Stories: