தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை தகுதியானோர் விண்ணப்பிக்க அழைப்பு

திருச்சி, ஆக.14: தமிழ்நாடு ெதாழிலாளர் நல வாரியத்திற்கு நிதி செலுத்தும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, ஊக்கத்தொகை பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தோட்ட நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரிகின்ற ெதாழிலாளர் நல வாரியத்திற்கு தொழிலாளர் நல நிதி செலுத்தும் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை, கல்வி ஊக்கத்தொகை ஆகிய திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி சேர்த்து ரூ.25000 வரை ஊதியமாக பெறும் தொழிலாளர்கள் இந்த திட்டங்களுக்காக விண்ணப்பிக்கலாம். கல்வி உதவித்தொகையாக ஒவ்வொரு கல்வி ஆண்டிற்கும் பொறியியல், மருத்துவம், சட்டம், ஆசிரியர் பயிற்சி, விவசாயம், உடற்பயிற்சி ஆகிய படிப்புகளுக்கு பட்டய படிப்பு முதல் பட்ட மேற்படிப்பு வரை ரூ.5000 முதல் ரூ.12000 வரையும், மேல்நிலை கல்வி மற்றும் தொழிற் பயிற்சி கல்விக்கு ரூ.4000 வழங்கப்படுகிறது.

Advertising
Advertising

தமிழகத்திலுள்ள ஒவ்வொரு கல்வி மாவட்டங்களிலும் அரசு பொதுத்தேர்வில் முதல் 10 இடங்களில் பெறும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு 10ம் வகுப்பிற்கு ரூ.2000, 12ம் வகுப்பிற்கு ரூ.3000மும் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. புத்தகம் வாங்க உதவித்தொகையாக மேல்நிலைக் கல்வி முதல் பட்ட மேற்படிப்பு வரை ரூ.1000 முதல் ரூ.3000ம் வரை உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இந்த திட்டங்களுக்கு விண்ணப்பங்களை பணிபுரியும் நிறுவனத்தின் மூலம் வரும் 31.12.2019க்குள் செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், அஞ்சல் பெட்டி எண்.718, தேனாம்பேட்டை, சென்னை-6 என்ற முகவரிக்கு தொழிலாளர்கள் அனுப்ப வேண்டும். இத்தகவலை திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) சதீஸ்குமார் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருக்கிறார்.

Related Stories: