ஆமை வேகத்தில் திருச்சி ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் பயணிகள்

புகார்திருச்சி, ஆக.14: திருச்சி ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகளான அழகுப்படுத்தும் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருவதாக ரயில் பயணிகள் புகார் தொிவித்து வருகின்றனர். திருச்சி ரயில் நிலையத்தில் நுழைவு வாயில் பகுதியில் புதுப்பிக்கும் பணிகள் கடந்த ஓரு வருடமாக நடந்து வருகிறது. ரயில் நிலையம் பராமரித்தல் மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு ரயில் பயணகளிடம் 2 சதவீதம் கூடுதல் கட்டண வசூல் செய்யப்படுகிறது. இந்த கூடுதல் கட்டணம் மூலமாக தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலைய நுழைவு வாயில் பகுதிகளில், பஸ், கார், ஆட்டோ, டூவிலர் உள்பட பல்வேறு வாகனங்கள் வந்து செல்ல வசதிகள் செய்கின்றனர். மேலும் நுழைவு வாயில் பகுதியில் புதிய நீரூற்று, புல் தரைகள் அமைத்து அழகுப்படுத்தும் பணிகளும் நடக்கிறது.

தற்போது திருச்சி ரயில் நிலைய நுழைவு வாயில் பகுதியில் ரூ.22 கோடி ஓதுக்கீடு செய்து புதுப்பிக்கும் பணிகள் நடக்கிறது. மேலும் திருச்சி ரயில் நிலையத்தில் 8வது பிளாட் பாரம் ரூ.8 கோடியில் அமைக்கப்பட்டு பணிகள் கடந்த ஒரு வருடமாக ஆமை வேகத்தில் நடக்கிறது. மேலும் இலவசமாக வழங்கி வந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. வயதானவர்கள், உடல் ஊனமுற்றவர்கள், குழந்தைகள் இலவசமாக செல்லக்கூடிய பேட்டரி கார் ஒரு நபருக்கு ரூ.30 வீதம் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது என்று ரயில் பயணிகள் வேதனை தொிவித்தனர்.

Related Stories: