வையம்பட்டியில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்

மணப்பாறை, ஆக. 14: வையம்பட்டியில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மணப்பாறை அடுத்த வையம்பட்டி காந்தி நகர், அய்யப்பன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு கடந்த ஒரு வாரமாக குடிநீர் சரிவர வரவில்லை. இதுபற்றி ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனை கண்டித்தும், குடிநீர் உடனடியாக வழங்க கோரியும் நேற்று அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் காந்தி நகர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த வையம்பட்டி போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இதனால் திருச்சி-திண்டுக்கல் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: