சத்துணவு அமைப்பாளரிடம் தங்கம் என நினைத்து கவரின் செயின் பறிப்பு

மணப்பாறை, ஆக.14: துவரங்குறிச்சி அருகே சத்துணவு அமைப்பாளரிடம் தங்கம் என நினைத்து கவரிங் செயினை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.

மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே தெத்தூரை சேர்ந்தவர் லட்சுமி. சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். லட்சுமி தினசரி வேலைக்கு செல்லும்போது தங்க செயினை அணிந்துகொண்டு செல்வதை மர்ம நபர்கள் சிலர் கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று தெற்கு தெத்தூரை நோக்கி டூவீலரில் சென்ற லட்சுமியை எதிரே பைக்கில் வந்த 3 பேர் வழிமறித்தனர். இதனால், லட்சுமி நிலை தடுமாறி டூவீலரிலிருந்து கீழே விழுந்தார். இதனையடுத்து, மர்ம நபர்கள் மூவரும் திடீரென லட்சுமி கழுத்தில் கிடந்த செயினை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் சென்றுவிட்டனர்.
Advertising
Advertising

லட்சுமி தினசரி தனியாக வேலைக்கு செல்வதை தெரிந்துகொண்ட மர்ம நபர்கள் நேற்று வழிமறித்து தங்கம் என கவரிங் செயினனை பறித்துச் சென்றுள்ளனர். நேற்று முன்தினம் தான் லட்சுமி தான் தினசரி அணிந்திருந்த தங்க செயினை அவசர தேவைக்காக வங்கியில் அடகு வைத்து பணம் பெற்றுள்ளார். இதனால், கவரிங் செயினை லட்சுமி அணிந்துள்ளார். இதனை அறியாத மர்ம நபர்கள் தங்கம் என நினைத்து கவரிங் செயினை பறித்துச் சென்றுள்ளனர். இது குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: