×

விருதுநகர்-சிவகாசி சாலையில் பிளாஸ்டிக் மறுசுழற்சி ஆலையால் விபத்து ஏற்படும் அபாயம்

விருதுநகர், ஆக. 14: விருதுநகரில் சாலையோரத்தில் நடத்தப்படும் கழிவு பிளாஸ்டிக்குகளை தூசியாக வெட்டும் ஆலை முன் குவிந்து கிடக்கும் தூசிகுப்பைகள் காற்றி பறந்து சாலையில் செல்வோர் மீது விழுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. விருதுநகரில் சிவகாசி ரோட்டில் தாமரை மகளிர் குழு நடத்தும் பிளாஸ்டிக் மறுசுழற்சி மையத்தில் ஊராட்சிகளில் சேரும் பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்து பொடி தூசியாக வெட்டும் ஆலை நடத்தப்படுகிறது. பிளாஸ்டிக கழிவுகளை இலவசமாக பெற்று தரம் பிரித்து தூசியாக வெட்டி கிலோ ரூ.35 விலையில் விற்பனை செய்கின்றனர். தார்ரோடுகள் அமைக்கும் போது பிளாஸ்டிக் தூசிகள் விலைபோகின்றன. தார் ரோடு போடுவதற்கான ஆர்டர்கள் வழங்கும் வரை பிளாஸ்டிக் மற்றம் பாலித்தின் பைகளை வெட்டி சிறு, சிறு தூசியாக மூட்டைகளில் குவித்து வைக்கின்றனர். மகளிர் குழுவினர் பிளாஸ்டிக் தூசிகளை சிவகாசி ரோட்டிலும், கூரைக்குண்டு ஊராட்சி ஆனைக்குழாய் தெருவிற்கு செல்லும் சாலையிலும் குவித்து வைத்துள்ளனர்.

இந்த பிளாஸ்டிக் தூசி குவியலில் இருந்து தூசிகள் காற்று வீசும் மாலை நேரத்தில் சாலைகளில் பறக்கிறது. அருகில் உள்ள கடைகள், வீடுகளுக்குள் செல்கிறது. இதனால் குடியிருப்புவாசிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பிளாஸ்டிக் மறுசுழற்சி மையத்தில் உரிய பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. சாலையோரத்திலும் மக்கள் நடமாடும் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை தூசியாக்கி கொட்டி வைத்துள்ளனர். கணேசன் கூறுகையில், பிளாஸ்டிக் கழிவு தூசிகள் காற்று வீசும் போது மக்கள் மீது விழுகிறது. மகளிர் குழுவினரிடம் தெரிவித்தால் கலெக்டரிடம் கூறுங்கள் என்கின்றனர். சுழற்சி மையத்தை சுற்றி முறையான தடுப்புகள் இருந்தால் காற்று வீசும் போது சாலையில் செல்லும்போது அவர்களது கண்களில் பிளாஸ்டிக் தூசி விழுவதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. செல்வகுமார் கூறியதாவது: பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. கழிவுகள் காற்றில் பறப்பதால் வாகன ஓட்டிகள், கடையினர் பாதிக்கப்படுகின்றனர். சாலையோரத்தில் இருக்கும் கழிவு பிளாஸ்டிக் மறுசுழற்சி மையத்தை இடம் மாற்றம் செய்ய வேண்டும். தாமரை மகளிர் மன்ற நிர்வாகி காமாட்சி: ரோடு போட ஆர்டர்கள் வரும் வரை வைத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. முழுமையாக தார்பாய் போட்டு மூட முடியவில்லை என்றார். மகளிர் திட்ட அலுவலர் கிறிஸ்டோபர்: ரோடு போடுவதற்கான ஆர்டர் அளித்து வருகின்றனர். விரைவில் பிளாஸ்டிக் கழிவுகள் எடுக்கப்படும் என்றார்.

Tags :
× RELATED கல்லூரி முன்னாள் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி