சேவிங் செய்துவிட மறுத்தவருக்கு அடி

பெரியகுளம், ஆக.14: பெரியகுளம் வடகரை வைத்தியநாதபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(48). சலூன் கடை வைத்துள்ளார். வடகரையை சேர்ந்த புகழேந்திராஜா(24) குடிபோதையில் சலூன் கடைக்கு வந்து சேவிங் செய்து விடுமாறு கூறியுள்ளார். அதற்கு ராஜேந்திரன் மறுத்துள்ளார். ஆத்திரமடைந்த புகழேந்திராஜா அவரை கட்டையால் தாக்கினார். பெரியகுளம் வடகரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags :
× RELATED பூட்டிய வீட்டில் நகை, பணம் கொள்ளை