மூதாட்டியை தாக்கிய 4 பெண்கள் மீது வழக்கு

பெரியகுளம், ஆக.14: மூதாட்டியை தாக்கியதாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரியகுளம் தென்கரையை சேர்ந்தவர் சாந்தி(60). இவர் அதே பகுதியை சேர்ந்த இந்திராணி என்பவரின் வீட்டில் ஒத்திக்கு இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதின் காரணமாக இந்திராணி, அவரது உறவினர்கள் திலகா, சரண்யா, சித்ரா, மருமகன் நல்லமணி ஆகியோர் சாந்தியை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த சாந்தி பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சாந்தி கொடுத்த புகாரின் பேரில் தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags :
× RELATED இரண்டரை ஆண்டுகளாக நிரந்தர செயற்பொறியாளர் இல்லாத பெரியாறு அணை