டூவீலரில் இருந்து விழுந்தவர் சாவு

ஆண்டிபட்டி, ஆக.14: டூவீலரில் சென்ற நிருபர் தவறி விழுந்ததில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி அருகே பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த முருகன் மகன் கணேசன் (44). இவர் தனியார் தொலைக்காட்சியில் நிருபராக பணிபுரிந்து வந்தார். கடந்த 8ம் தேதி கண்டமனூர் அருகே அம்பாசமுத்திரம் சாலையில் டூவீலரில் வந்து கொண்டிருந்தார். அப்போது வேகத்தடையில் எதிர்பாராவிதமாக
நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கணேசன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது சம்பந்தமாக கண்டமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED இரண்டரை ஆண்டுகளாக நிரந்தர செயற்பொறியாளர் இல்லாத பெரியாறு அணை