வீட்டில் பதுக்கிய கஞ்சா பறிமுதல்

போடி, ஆக.14: போடியில் வீட்டில் பதுக்கி விற்கப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. போடி அசேன்உசேன் தெருவில் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. போடி நகர சார்பு ஆய்வாளர் தாமரை கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பாஸ்கரன்(54) என்பவர் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கிருந்து ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் பாஸ்கரனையும் கைது செய்து சிறைக்கு அனுப்பினர்.

Tags :
× RELATED விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடக்கிறது