×

சிபிசிஐடி டிஜிபி தேனியில் ஆய்வு

தேனி, ஆக.14: தேனியில் சி.பி.சி.ஐ.டி., டிஜிபி ஜாபர்சேட் மூன்று மணி நேரம் ஆலோசனை நடத்தினார். தேனி சமதர்மபுரத்தில் சி.பி.சி.ஐ.டி., போலீஸ் இன்ஸ்பெக்டர் அலுவலகம் உள்ளது. நேற்று காலை 11 மணிக்கு அங்கு வந்த டி.ஜி.பி., ஜாபர்சேட் மூன்று மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் எஸ்.பி., பாஸ்கரன், டி.எஸ்.பி.,முத்துராஜ், சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி., கருப்பையா, இன்ஸ்பெக்டர் சித்ராதேவி, எஸ்.ஐ., வேல்முருகன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். வழக்கமான ஆய்வு பணிகள், ஆவணங்கள் பராமரிப்பு பணிகள், வழக்குகளின் நிலவரம் குறித்து டி.ஜி.பி., ஆலோசனை நடத்தினார். தேனி மாவட்டத்தில் 15 வழக்குகளை சிறப்பாக கையாண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த தேனி போலீஸ் குழுவினருக்கு டி.ஜி.பி., பாராட்டு தெரிவித்தார்.

Tags :
× RELATED மயிலாடும்பாறை காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா