திருப்புவனம் அருகே மின்சாரம் தாக்கி ஆயில் மில் ஊழியர் பலி மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை

திருப்புவனம், ஆக.14:திருப்புவனம் அருகே மின்சாரம் தாக்கி தனியார் ஆயில் மில் ஊழியர் ஒருவர் பலியானார். மற்றொருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருப்புவனம் அருகே பொட்டப்பாளையத்தில் தனியார் ஆயில் மில் உள்ளது. அங்கு பணிபுரியும் குஜராத் மாநிலத்தை சேர்ந்த விட்டல் என்பவர் நேற்று காலை மோட்டார் சுவிட்ச்சை ஆன் செய்த போது மின்சாரம் தாக்கியது.

இதில் அருகிலிருந்த ஆயிலில் பற்றிய தீ விட்டல் மீது பரவி எரிந்தது. இதில் பலத்த காயமடைந்த விட்டலும், மற்றொரு ஊழியரான ஜெயபிரகாஷ் என்பவரும் (இவரும் குஜராத் மாநிலத்தை சேர்த்தவர்) மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் விட்டல் சிகிச்சை பலனின்றி பலியானார். ஜெயப்பிரகாஷ் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து திருப்புவனம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED நண்பரை கொலை செய்த இருவருக்கு 7ஆண்டு சிறை