நாளை கிராம சபை கூட்டம்

சிவகங்கை, ஆக.14:  நாளை சுதந்திர தினத்தையொட்டி மாவட்டத்தில் உள்ள 445 ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடக்க உள்ளது. இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் குடிநீர் சிக்கனம், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை, கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல் மற்றும் டிப்தீரியா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags :
× RELATED நெல்கொள்முதல் நிலையம் வருமா?