கொட்டாம்பட்டியில் பகலில் எரியும் மின்விளக்குகள்

மேலூர், ஆக. 14: கொட்டாம்பட்டியில் பகலில் எரியும் தெருவிளக்குகளால், மின்சாரம் வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி ஊராட்சியில் பல இடங்களில் பகலில் தெருவிளக்குகள் எரிகின்றன. நகரில் உள்ள பழைய காவல்நிலையம் முன்புள்ள தெருவிளக்கு பகலில் எரிகிறது. இதேபோல, ஊராட்சியில் சில இடங்களில் தெருவிளக்குகள் தொடர்ந்து எரிகின்றன. இதனால், மின்சாரம் வீணாகிறது.

Advertising
Advertising

பொதுமக்களிடம் மட்டும்தான் மின்வாரியம் மின்சிக்கனத்தை வலியுறுத்துவதாக புகார் தெரிவிக்கின்றனர். எனவே, சம்மந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளும், ஊராட்சி நிர்வாகமும் கொட்டாம்பட்டியில் பகலில் எரியும் மின்விளக்குகளை அணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: