சத்துணவு மையங்களில் கீரை வளர்க்க திட்டம்

திருமங்கலம், ஆக. 14: தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவியருக்கு சத்துணவு வழங்கப்படுகிறது. இதற்காக காய்கறிகள், கீரைகள் வெளியே வாங்கப்படுகின்றன. இந்தநிலையில், சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் மத்திய அரசின் ‘போஷன் அபியான் திட்டம் மூலம், அந்த மையங்களுக்கு தேவையான காய்கறி, கீரை வளர்க்க தமிழகம் முழுவதும் தண்ணீர் வசதியுள்ள சத்துணவு, அங்கன்வாடி மையங்களை தேர்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

நகராட்சிகளில் ஆணையாளர், ஒன்றியங்களில் பிடிஓக்கள், பேரூராட்சிகளில் செயல்அலுவலர்கள் தண்ணீர் வசதியுள்ளன் சத்துணவு, அங்கன்வாடி மையங்களை கணக்கெடுத்து வருகின்றனர். இந்த கணக்கெடுப்பு முடிவந்தவுடன் அந்தந்த மையங்களில் காய்கறிகள், கீரைகள் வளர்த்து அவை சத்துணவில் பயன்படுத்தப்படும் என் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு