மாநில அளவிலான கால்பந்து போட்டியில் அரசு விளையாட்டு விடுதி அணி வெற்றி

மதுரை, ஆக. 14: மாநில அளவிலான கால்பந்து போட்டியில், மதுரை அரசு விளையாட்டு விடுதி அணி வெற்றி பெற்றது. மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மதுரைக் கிளை உள்ளது. இங்கு மதுரை அரசு விளையாட்டு விடுதி உள்ளது. இதில் கால்பந்து வீரர்கள் தங்கி ‘ஏசி’ பள்ளியில் படித்து வருகின்றனர். இங்கிருந்த கால்பந்து பயிற்சியாளர், வீரர்களுக்கு பயிற்சி அளிக்காமல் அலட்சியம் காட்டியதால், விளையாட்டு விடுதி கால்பந்து அணி, தோல்வி அடைந்து வந்தது. இது தொடர்பாக பயிற்சியாளர் மீது வீரர்கள் புகார் தெரிவித்தனர். இது குறித்து நமது நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக அவர் நீக்கப்பட்டு, புதிய பயிற்சியாளர் ராஜா நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து, மாநில அளவிலான கோத்தே சூப்பர் லீக் கால்பந்து போட்டிகள் சென்னையில் நடந்தது. இதில், அரசு விளையாட்டு விடுதி அணி, சென்னை வேலம்மாள் பள்ளி அணியுடன் மோதியது. இரு அணிகளும் கோல்கள் போடாததால், ‘டை பிரேக்கர்’ முறையில் மதுரை விளையாட்டு விடுதி அணி 3:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அதுபோல மாநில அளவிலான ஹாக்கி போட்டி திருச்சியில் நடந்தது. இதில், விளையாட்டு விடுதி அணி கலந்து கொண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறி 2ம் இடத்தை பிடித்தது. வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு பாராட்டு விழா, ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்தது. மாவட்ட விளையாட்டு அலுவலர் ெலனின் தலைமை வகித்தார். பயிற்சியாளர்கள் முருகன் (ஹாக்கி), குமரேசன் (கைப்பந்து) மற்றும் ராஜா (கால்பந்து) உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: