பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது

திருமங்கலம், ஆக. 14: உசிலம்பட்டி அருகே, வி.பாறைப்பட்டியை சேர்ந்த பாண்டியம்மாள் (45), இவர் அருகிலுள்ள தோட்டத்திற்கு புல் அறுக்கச் சென்றார். புல் கட்டை தூக்கிக் கொண்டு ராஜேந்திரன் என்பவரது தோட்டம் வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ராஜேந்திரன் மகன் செல்லப்பாண்டி (24), தோட்டத்தில் படித்து கொண்டிருந்தார். அவரை பார்த்த பாண்டியம்மாள் ‘என்ன தம்பி போலீஸ் தேர்வுக்கு போகவில்லையா’ என கேட்டுள்ளார்.

தேர்வை தள்ளிவைத்தாக கூறிய செல்லப்பாண்டி, திடீரென அவர் மீது பாய்ந்து பலாத்காரம் செய்ய முயன்றார். பாண்டியம்மாள் சத்தம் போடவே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதைப்பார்த்த செல்லப்பாண்டி தப்பியோடி விட்டார். இது குறித்து பாண்டியம்மாள் கொடுத்த புகாரில் சிந்துபட்டி போலீசார் விசாரணை நடத்தி செல்லப்பாண்டியை கைது செய்தனர்.

Tags :
× RELATED மணல் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தவருக்கு வெட்டு