பாலப் பிரச்னைக்கு தீர்வு காணக்கோரி மனு

மதுரை, ஆக. 14: உத்தபுரத்தில் கண்மாய்க்கு செல்லும் கால்வாயை மறித்து பாலம் கட்டும் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என ஒரு சமூகத்தினர் கலெக்டரிடம் நேற்று மனு கொடுத்தனர். மதுரை மாவட்டம், உத்தப்புரம் மேலத்தெருவைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவரது தலைமையில் ஒரு சமூகத்தினர் நேற்று கலெக்டர் ராஜசேகரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், ‘எங்கள் சமூகத்திற்கும் பட்டியல் சமூகத்திற்கும் பிரச்னை உள்ளது. பட்டியல் இன மக்கள் 2 ஏக்கர் நிலத்தை வாங்கி வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். அச்சமூகத்தை சேர்ந்த ஒரு வீட்டிற்காக கண்மாய் கால்வாயை மறித்து குறுக்கே பாலம் கட்ட முயற்சிக்கின்றனர்.

பாலம் கட்டும் பகுதி எங்கள் சமூகத்தினர் பயன்படுத்தும் பொது இடம். இரண்டு சமூகத்தினரும் அமைதியாக வாழ கால்வாயை மறித்து பாலம் கட்டும் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்’ என தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக உசிலம்பட்டி ஆர்டிஓ விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

Related Stories: