அழகர்கோவிலில் நாளை ஆடித்தேரோட்டம்

அலங்காநல்லூர், ஆக. 14: அழகர்கோவிலில் உள்ள சுந்தராஜப் பெருமாள் கோயிலில் நாளை ஆடித்தேரோட்டம் நடக்கிறது. அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர்கோயிலில் ஆடிபெருந்திருவிழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினசரி அன்னம், சிம்மம், அனுமார், கருடன், சேஷ மற்றும் யானை வாகனங்களில் கள்ளழகர் என்ற சுந்தரராஜப்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று இரவு குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.

Advertising
Advertising

திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடி பிரமோற்சவ திருவிழா நாளை நடைபெறுகிறது. இதனையொட்டி காலை 5.15 மணிக்கு மேல் 6 மணிக்குள் திருத்தேருக்கு சுவாமி தேவியர்களுடன் எழுந்தருள்வார். தொடர்ந்து காலை 7.30 மணிக்குமேல் 8.15 மணிக்குள் திருத்தேரோட்டம் நடைபெறும். இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சியும், 16ம் தேதி தீர்த்தவாரியும் 17ம் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.

Related Stories: