பெரியாறு, வைகையில் போதிய தண்ணீர் இருப்பு 45 ஆயிரம் ஏக்கர் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் பெரியாறு பாசன விவசாயிகள் வலியுறுத்தல்

மதுரை, ஆக. 14: பெரியாறு, வைகை அணைகளில் போதிய தண்ணீர் இருப்பு இருப்பதால், மதுரை மாவட்டத்தில் உள்ள 45 ஆயிரம் ஏக்கர் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என பெரியாறு பாசன விவசாயிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். பெரியாறு திட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் முல்லைப்பெரியாறு பாசன விவசாயிகள் நேற்று மதுரை கலெக்டர் ராஜசேகரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

பெரியாறு, வைகை அணைகளின் தண்ணீர் இருப்பு 4 ஆயிரம் கன அடியாக உயர்ந்ததால். பேரணை முதல் கள்ளந்திரி வரை உள்ள 45 ஆயிரம் ஏக்கருக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். ஆனால், பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. தண்ணீர் திறக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட கலெக்டர் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பேசி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.
Advertising
Advertising

இது குறித்து பெரியாறு திட்ட குழு உறுப்பினர் மன்னாடிமங்கலம் முருகன், திருப்பதி ஆகியோர் நிருபர்களிடம் கூறுகையில், ‘கேரளாவில் மழையால், பெரியாறு அணையில் 130 அடிக்கு மேல் தண்ணீர் உள்ளது. அணையில் தண்ணீர் இருப்பு, 4,697 மில்லியன் கன அடி. வைகை அணையில் நீர்மட்டம் 38 அடிக்கு மேல் உயர்ந்துள்ளது. அணையில் 801 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. இரண்டு அணைகளின் மொத்த தண்ணீர் இருப்பு  5,498 மில்லியன் கனஅடி.  4 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் இருந்தாலே, மதுரை மாவட்டத்தில் உள்ள 45  ஆயிரம் ஏக்கருக்கு தண்ணீர் திறக்க வேண்டும். எனவே உடனே தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்தனர்.

Related Stories: