மருத்துவ நிறுவனங்கள் மேலாண்மை விதிகளை பின்பற்றி கழிவுகளை அகற்ற வேண்டும்

திண்டுக்கல், ஆக. 14:கழிவுகளை அகற்றும் போது மேலாண்மை விதிகளை பின்பற்ற தவறினால் மருத்துவ நிறுவனங்கள் சுற்றுச்சூழல் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், புறநோயாளிகளின் பிரிவுகள், கால்நைடை மருத்துவமனைகள், விலங்கினங்கள் சோதனை கூடங்கள், நோய் பரிசோதனை ஆய்வகங்கள், ரத்த வங்கிகள், ஆயுர்வேதம், யோகா, சித்தா, ஓமியோபதி மருத்துவமனைகள், யுனானி ஆராய்ச்சி, மருத்துவ கல்வி நிறுவனங்கள், சுகாதார முகாம்கள், மருத்துவம்- அறுவை சிகிச்சை முகாம்கள், தடுப்பூசி முகாம்கள், ரத்ததான முகாம்கள், பள்ளிகளின் முதலுதவி அறைகள், தடயவியல் ஆய்வகங்களில் சேரும் மருத்துவ கழிவுகளை தனித்தனியாக பிரித்து மேலாண்மை செய்ய வேண்டும். இதற்கு மாசுகட்டுப்பாடு வாரியத்திற்கு விண்ணப்பம் செய்து படிவம் 3ல் அங்கீகாரம் பெற வேண்டும். அத்தகைய அங்கீகாரத்தின் காலவிதியின் தேதியானது மாசு கட்டுப்பாடு வாரியத்தினரால் வழங்கப்படும்.

மருத்துவ கழிவுகளை கையாளும் எல்லா நிறுவனங்களும் காற்று, நீர் மாசு தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும். மருத்துவ கழிவு மேலாண்மை விதிகளின் கீழ், அங்கீகாரத்துடன் உடனடியாக விண்ணப்பித்து ஒப்புதல் பெற வேண்டும். படுக்கை வசதி இல்லாத மருத்துவ நிறுவனங்கள், தாமதமின்றி மருத்துவ கழிவு மேலாண்மை விதிகள் 2016ன் கீழ் காலாவதி இல்லாத அங்கீகாரத்தினை பெற வேண்டும்,. தேசிய பசுமை தீர்ப்பாயமும், முதன்மை பெஞ்ச் டில்லி கோர்ட்டும் மருத்துவ மேலாண்மை விதியை பின்பற்ற தவறியவர்களுக்கு சுற்றுச்சூழல் இழப்பீடு தொகையை பிடிக்க அறிவுறுத்தியுள்ளது என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

Related Stories: