சீனாவை போல் ராட்சத குழாய் மூலம் நதிநீர் இணைப்பு திட்டம் தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

வத்தலக்குண்டு, ஆக. 14: வத்தலக்குண்டு அருகே குன்னுவாரன்கோட்டையில் தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு அவசர கூட்டம் நடந்தது. மாநில பொதுச் செயலாளர் இளங்கோவன் தலைமை வகிக்க, பொருளாளர் சரவணன், சட்ட ஆலோசகர் பழனிக்குமார் முன்னிலை வகித்தனர்.  கூட்டத்தில் தமிழகத்தில் கோவை, நீலகிரி போன்ற மாவட்டங்களில் கடுமையான மழைப்பொழிவு உள்ளது. அருகிலுள்ள கொடைக்கானலில் கூட மழை பெய்து வருகிறது. ஆனால் வத்தலக்குண்டு பகுதியில் மழையே இல்லாமல் விவசாய பணிகள் முடங்கி கிடக்கின்றன. காரணம் நீர்நிலைகள் அனைத்து வறண்டு கிடப்பதனால்தான்.

எனவே மத்திய, மாநில அரசுகள் நவீன முறையில் சீனாவில் செயல்படுவது போல ராட்சத குழாய் வழி மூலம் நதிநீர் இணைப்பு திட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து இப்பணிக்காக வீட்டுக்கு ஒருவரை வேலைக்கு அனுப்ப தயார் என்றும்  விவசாயிகள் உறுதிமொழி எடுத்தனர். இதில் விவசாயிகள் பொன்னம்பலம், மொக்கராசு, போஸ், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இளைஞரணி செயலாளர் தங்கப்பாண்டி நன்றி கூறினார்.

Related Stories: