சேலம் ரயில்வே ஸ்டேஷனில் ரயில்களில் போலீசார் தீவிர சோதனை

சேலம், ஆக.14: சேலம் ரயில்வே ஸ்டேஷனில் சுதந்திர தினத்தையொட்டி, ரயில்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.  நாடு முழுவதும் சுதந்திர தினம் நாளை (15ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அசம்பாவித சம்பவங்கள் நடந்து விடக்கூடாது என்பதற்காக முக்கிய ரயில்வே ஸ்டேஷன்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த மத்திய உள்துறை அமைச்சம் உத்தரவிட்டுள்ளது. இதன்பேரில், தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.சேலம் ரயில்வே ஸ்டேஷனில் ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் தமிழக ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர். ரயில்வே ஸ்டேஷனின் முன்பகுதியில் டோர் பிரேம் மெட்டல் டிடெக்டர் அமைத்து, பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை பரிசோதித்து அனுப்பி வைக்கின்றனர். இதேபோல், பிளாட்பார்ம்களில் ரயிலுக்கு காத்திருக்கும் பயணிகளின் உடமைகளையும் மெட்டல் டிடெக்டர் கொண்டு பாதுகாப்பு படை போலீசார் சோதனையிடுகின்றனர்.

ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் அரவிந்த்குமார் தலைமையிலான பாதுகாப்பு படையினர், நேற்று முதல் வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் ஏறி சோதனையிட்டு வருகின்றனர். மேலும், துப்பாக்கி ஏந்தியபடி ஸ்டேஷன் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ரயில்வே யார்டு பகுதியிலும் ரோந்து சுற்றி வருகின்றனர். சேலம் கருப்பூர் ரயில்வே பாலம், ஈரோடு மார்க்கத்தில் உள்ள காவேரி பாலம் ஆகியவற்றில் பாதுகாப்பு படையினர், பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். நாளை மறுநாள் வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு சோதனையை தீவிரமாக மேற்கொள்ளவுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: