கெங்கவல்லி அருகே டூவீலர் விபத்தில் பெண் பலி

கெங்கவல்லி, ஆக.14: நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவர், தனது மனைவி இளையராணி(35) என்பவருடன் நேற்று காலை சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே மலையாளப்பட்டியில் இருந்து டூவீலரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். கெங்கவல்லி அரகே தெடாவூர் காமராஜர் நகர் பகுதியில் வந்தபோது அந்த வழியாக சென்ற சைக்கிள் மீது டூவீலர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், வண்டியில் இருந்து தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயமடைந்தனர். உடனே, அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, முதலுதவி சிகிச்சைக்கு பின்பு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு, சிகிச்சை பலனின்றி இளையராணி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கெங்கவல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.  

Advertising
Advertising

Related Stories: