சேலம் கிழக்கு கோட்டத்தில் இன்று மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

சேலம், ஆக.14: சேலம் கிழக்கு கோட்டத்தில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது. சேலம் உடையாப்பட்டி காமராஜர்நகர் காலனியில் செயல்படும் கிழக்கு கோட்ட மின் அலுவலகத்தில் இன்று (14ம் தேதி) மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது. மதியம் 3 மணிக்கு, மேற்பார்வை பொறியாளர் சண்முகம் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் கலந்துகொண்டு, தங்களின் மின் சம்பந்தமான குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். இத்தகவலை செயற்பொறியாளர் சுந்தரி தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: