மாணவியை கடத்தி திருமணம்

சேலம்,ஆக. 14: சேலத்தில் கல்லூரி மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்த வழக்கில் வாலிபர் உள்பட 4 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். சேலம் அன்னதானப்பட்டியை சேர்ந்த 17 வயதான சிறுமி, கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவரை நெத்திமேட்டை சேர்ந்த கிஷோர்(21) என்ற வாலிபர் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து அந்த மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்தி சென்ற வாலிபர் கிஷோர்(21), உடந்தையாக இருந்த அவரது தாய் லதா(39), கிஷோரின் நண்பர்கள் நிவாஷ்(23), ெசந்தில்(39) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags :
× RELATED பண்ணவாடி பரிசல் துறையில் படகு பழுதானதால் போக்குவரத்து நிறுத்தம்