எஸ்.பாப்பாரப்பட்டியில் ₹6.68 லட்சத்திற்கு பருத்தி விற்பனை

ஆட்டையாம்பட்டி, ஆக.14: ஆட்டையாம்பட்டி அருகே எஸ்.பாப்பாரப்பட்டியில் நடைபெற்ற ஏலத்தில் ₹6.68 லட்சத்திற்கு பருத்தி விற்பனையானது. சேலம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில் எஸ்.பாப்பாரப்பட்டி கூட்டுறவு சொசைட்டியில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில், ஆட்டையாம்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதியான சென்னகிரி, பாப்பாரப்பட்டி, பாலம்பட்டி, பைரோஜி, இருசனாம்பட்டி உள்ளிட்ட பகுதியில் இருந்து விவசாயிகள் 323 பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்து குவித்தனர். பின்னர், நடைபெற்ற ஏலத்தில் ஆத்தூர், இடைப்பாடி, தெடாவூர், கொங்கணாபுரம் மற்றும் திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு விலை கோரினர். இதில், சுரபி ரகம் கிலோ ₹59 முதல் ₹64.80 வரையிலும் ஏலம் போனது. ஆக மொத்தம் 323 பருத்தி மூட்டை ₹6,68,238க்கு விற்பனையானது.

Advertising
Advertising

Related Stories: