உழவர் சந்தைகளுக்கு மிளகாய் வரத்து அதிகரிப்பு

சேலம், ஆக 14: சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில் உழவர் சந்தைகள், மார்க்கெட்டுக்கு காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விலை குறைய துவங்கியுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் தமிழகத்தில் பருவமழை இல்லாததால் காய்கறிகளின் விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டு, விலை அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் தண்ணீர் பிரச்னை நீங்கி விளைச்சல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக உழவர் சந்தைகளில் பச்சை மிளகாய் வரத்தும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.  நேற்றைய நிலவரப்படி உழவர் சந்தைகளில் பச்சை மிளகாய், கிலோ ₹30க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘‘சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் விவசாயிகள் பயிரிடப்பட்டுள்ள காய்கறிகள் விளைச்சல் அதிகரித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் தலைவாசல்,  ஆத்தூர், வீரகனூர் கெங்கவல்லி உள்ளிட்ட பகுதிகளில் பச்சை மிளகாய் பயிரிடப்பட்டுள்ளது. அறுவடை செய்யப்படும் பச்சை மிளகாய், விற்பனைக்கு உழவர் சந்தைகளுக்கு கொண்டு வரப்படுகிறது. இதனால் வரத்து அதிகரித்து கிலோ ₹30க்கு விற்பனை செய்யப்படுகிறது,’’ என்றனர்.

Related Stories: