ஜலகண்டாபுரம் கூட்டுறவு சங்கத்தில் ₹20 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்

ஜலகண்டாபுரம், ஆக.14: ஜலகண்டாபுரம் கூட்டுறவு சங்கத்தில் நேற்று ₹20 லட்சத்திற்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது. சேலத்தை அடுத்த ஜலகண்டாபுரத்தில் உள்ள திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கிளையில் நேற்று கொப்பரை ஏலம் நடைபெற்றது. ஜலகண்டாபுரம், இடைப்பாடி, கொங்கணாபுரம், பூலாம்பட்டி, மேட்டூர், கொளத்தூர், நங்கவள்ளி, மற்றும் தர்மபுரி மாவட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 450 மூட்டை கொப்பரையை ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனர். இதை கொள்முதல் செய்ய ஈரோடு, சேலம் மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள் ஏலத்தை நடத்தினர். இதில் முதல் தர கொப்பரை கிலோ ₹92.60 முதல் ₹102.10 வரையும், இரண்டாம் தர கொப்பரை கிலோ ₹52.60 முதல் ₹78.30 வரையிலும் ஏலம் போனது. ஒட்டு மொத்தமாக விவசாயிகள் கொண்டு வந்த 450 மூட்டை கொப்பரை ₹20 லட்சத்திற்கு ஏலம் போனதாக கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்


Tags :
× RELATED கருமந்துறையில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்