×

சேலம் மாநகரில் கொட்டித்தீர்த்த மழை

சேலம், ஆக.14:  தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும், மாநிலத்தின் ஒருசில மாவட்டங்களிலும், ஓரளவு மழைப்பொழிவு இருந்து வருகிறது. இதனிடையே சேலத்தில் நேற்று மதியம் முதலே, வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து, மாலை 4 மணியளவில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. பழைய பஸ் ஸ்டாண்ட், அம்மாப்பேட்டை, பொன்னமாப்பேட்டை, 5 ரோடு, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி, அஸ்தம்பட்டி, சீலநாய்க்கன்பட்டி என பல இடங்களில், சுமார் அரைமணிநேரத்திற்கும் மேலாக நல்ல மழை பெய்தது. இதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
குறிப்பாக, அன்னதானப்பட்டியிலிருந்து நெத்திமேடு செல்லும் சாலை, நெத்திமேட்டில் உள்ள தனியார் பள்ளி முன், அம்மாப்பேட்டை மிலிட்டரி ரோடு, 4 ரோடு, புது பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில், சாக்கடை கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடியது. கடும் துர்நாற்றம் வீசியதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்குள்ளாகினர். பல இடங்களில் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளிலும் மழைநீர் புகுந்ததால், அப்பகுதியினர் கடும் அவதிக்குள்ளாகினர்.


Tags :
× RELATED ₹1.50 லட்சம் கொள்ளை