வேலை கிடைக்காததால் பட்டதாரி இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

சேலம், ஆக.14: சேலம் கொண்டலாம்பட்டி வேலை கிடைக்காத விரக்தியில் முதுகலை பட்டதாரி இளம்பெண், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சேலம் கொண்டலாம்பட்டி அருகே நாட்டாமங்கலம் தானாங்கரடு பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி மகள் சவுந்தர்யா(26). இன்ஜினியரிங்கில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். கடந்த சில மாதங்களாக வேலை தேடி வந்துள்ளார். ஆனால், சரியானபடி வேலை எதுவும் கிடைக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த அவர், நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்ெகாலை செய்துகொண்டார். தகவலறிந்து வந்த கொண்டலாம்பட்டி போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு ெசய்து விசாரித்து வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: